அச்சிறுப்பாக்கம்:மதுராந்தகம் பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டு, மனம் திருந்தி வாழ்கிறவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கறவை மாடுகள் வழங்கப்பட்டன.
மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் பல பகுதிகளில் மது விற்பனை நடக்கிறது. மது விற்பனையில் ஈடுபட்டு பலரும் கைது செய்யப்படும் நிலையில், சிலர் மட்டும் மனம் திருந்தி வாழ்கின்றனர்.இந்நிலையில், மனம் திருந்தி வாழ்வோரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் மறுவாழ்வுக்கான நல திட்டமாக, கன்றுடன் கூடிய கறவை பசுக்கள் வழங்கும் நிகழ்ச்சி, நடந்தது.
அச்சிறுப்பாக்கத்தில் எட்டு பேருக்கும், சீவாடி கிராமத்தில் இருவருக்கும், கப்பிவாக்கத்தில் நால்வருக்கும், சோத்துப்பாக்கம், ராமாபுரம், நெல்வாய், எண்டத்துார், செங்காட்டூர், பாப்பாநல்லுார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கும், கன்றுக்குட்டியுடன் கூடிய கறவை பசு வழங்கப்பட்டது.மாவட்ட கலால் உதவி ஆணையர் லட்சுமணன், கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தி, அச்சிறுப்பாக்கம் கால்நடை மருத்துவ அலுவலர் ராஜன் உள்ளிட்டோர், பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கினர்.