ஸ்ரீவில்லிபுத்துார் :ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் அச்சம்தவிர்த்தான், பிள்ளையார்குளம், திருவண்ணாமலை, பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா நடந்தது.கலால் உதவி ஆணையர் சிவக்குமார், ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம், தாசில்தார் ராமசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி, அலுவலர் கனகராஜ், ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணவேணி, பூங்கொடி பங்கேற்றனர்.இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 200 பண்ணை குடும்பங்களுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், விசைத் தெளிப்பான்கள், உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது.