புகார் பெட்டி
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை தேவை

நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் எதிரில், பேருந்து நிறுத்தம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்தும், மறைமலை நகரில் இருந்தும் வரும் அரசு மாநகர பேருந்துகள், இந்நிறுத்தத்தில் நிறுத்தப்படுகின்றன. பயணியர், அப்பேருந்துகளில் ஏறி செல்கின்றனர்.இங்கு பயணியர் நிழற்குடை இல்லாததால், கோடை வெயிலில் நீண்ட நேரம் நிற்க முடியாமல் மிகவும் பரிதவிக்கின்றனர். எனவே, பயணியர் வசதிக்காக, நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
சா.சக்திவேல், கூடுவாஞ்சேரி.


உருக்குலைந்த மின்கம்பம்சீரமைக்க கோரிக்கை
மறைமலை நகர், சாமியார் கேட் அடுத்த பேரமனுார் செல்லும் பிரதான சாலையின் ஓரம் நிறைய மின்கம்பங்கள் உள்ளன.இதில் இரண்டு மின்கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, எலும்புக்கூடுபோல் உள்ளன. பலத்த காற்று அடித்தால் இக்கம்பங்கள் விழுந்து, மின் விபத்து ஏற்படுவது மட்டுமின்றி, அங்கு வசிப்போருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.மிகவும் உருக்குலைந்து காணப்படும் இந்த மின்கம்பங்களை அகற்றி, புதிதாக மின்கம்பம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.ஹரிஹரன்,மறைமலை நகர்.


பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி தேவை
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில், சாலையின் இருபுறமும், பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சை மற்றும் பிற இடங்களுக்கு செல்ல, இந்த நிறுத்தங்களை பயன்படுத்துகின்றனர்.பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. நிறுத்தத்தில் இருக்கை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாதது சிரமமாக இருக்கிறது. இருக்கைகள், குடிநீர் வசதி ஏற்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆ.சாந்தி, படாளம், செங்கல்பட்டு.


நடை மேம்பாலத்தில் படிக்கட்டுகள் சேதம்
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது, பல்வேறு இன்னல்களையும், விபத்துகளையும் மக்கள் சந்தித்து வந்தனர்.இதனால், மோச்சேரி செல்லும் சாலை அருகில், விபத்தை தடுக்க, நெடுஞ்சாலைத் துறை நடை மேம்பாலம் அமைத்தது.இந்த பாலம் வழியாக, அரசு போக்குவரத்து பணிமனை, கால்நடை மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த பாலத்தின் படிக்கட்டுகள் சேதமடைந்து உள்ளதால், செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத் துறையினர், படிக்கட்டுகளை சீரமைத்து தர வேண்டும்.
மு.வினோத்குமார்,மதுராந்தகம்.


 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X