விடிவு பிறக்குமா விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு...: அடிப்படை வசதிகள் இன்றி அல்லாடும் பயணிகள்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


விருதுநகர், :மாவட்ட தலைநகரான விருதுநகரின் ரயில்வே ஸ்டேஷனில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.மாவட்டத்தில் பெரிய ஸ்டேஷனாக விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இருப்பினும் தற்போது வரை அடிப்படை வசதிகள் எதுவும் பெரிய அளவில் செய்து தரப்படவில்லை. விருதுநகரை இரண்டாக பிரித்து ரயில்வே வழித்தடம் செல்கிறது. இதன் மேற்கு பக்கம் தான் நுழைவு வாயில் உள்ளது.கிழக்கு பக்கமும் வாயில் அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. மருத்துவக்கல்லுாரி வேறு துவங்கி உள்ளதால் மாணவர்கள் நலன் கருதியும், பாண்டியன் நகர், ஐ.சி.ஏ., காலனி, ராமமூர்த்தி ரோடு, அல்லம்பட்டி மக்களின் நலன் கருதியும் கிழக்கு பக்கம் வாயில் அமைப்பது அவசியமாகி உள்ளது. தற்போது நடைமேம்பாலம் 4வது நடைமேடை வரை மட்டும் தான் உள்ளது.இதை விரிவுப்படுத்தி கிழக்கு வாயில் அமைக்க வேண்டும். கிழக்கு பக்கத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் சமுக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கின்றன. மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வயதானவர்கள் செல்லும் வகையில் தானியங்கி படிக்கட்டுகள், பேட்டரி வாகன வசதி போன்ற ஏற்பாடுகளும் அவசியமாகி உள்ளது. 2, 3வது நடைமேடைகளில் கழிப்பறை அமைக்க வேண்டும்.பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் குறைந்த அளவே காத்திருப்பு இருக்கைகள் இருப்பதால் பயணிகள் சிலர் தரையில் அமர்ந்து காத்திருக்கும் சூழல் உள்ளது. பூட்டியே கிடக்கும் பயணிகள் காத்திருப்பு அறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஸ்டேஷனுக்கு உள்ளேயும் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும்.இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லை, பொதிகை, அனந்தபுரி, முத்துநகர், குருவாயூர், இன்டர்சிட்டி, சிலம்பு, மும்பை உட்பட 15 எக்ஸ்பிரஸ் ரயில்கள், மதுரை செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் மக்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த தென்னக ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.விருதுநகர் ரயில்வே பயணியர் சங்கத்தின் உதவி தலைவர் காமராஜ் கூறியதாவது: ஆண்டுக்கணக்கில் அடிப்படை வசதிகளை கேட்டு வருகிறோம். நாங்கள் கேட்டதில் சிலவற்றை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. இருப்பினும் நீண்ட கால கோரிக்கையான கிழக்கு பக்கத்தில் நுழைவு வாயிலுடன் கவுண்டரும் அமைக்க வேண்டும். 2வது நடைமேடையில் அகற்றப்பட்ட கழிப்பறையை மீண்டும் அமைக்க வேண்டும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X