சேறும், சகதியுமான ரோடு; குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவலம் : திருக்குமரன் நகர் குடியிருப்போர் புலம்பல்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


அருப்புக்கோட்டை, நடக்க முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக ரோடும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், சுகாதார கேடு ஏற்படுவதாகவும், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புலம்புகின்றனர்.அருப்புக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி திருகுமரன் நகர். இதன் குடியிருப்போர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் ராமசுப்பிரமணி, பொருளாளர் பாலச்சந்திரன், உறுப்பினர்கள் தங்கராஜ், கார்த்திக், அருள்குமார் கூறியதாவது:எங்கள் பகுதி உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. தெருக்களில் ரோடு வசதி இல்லை. குறிப்பாக 8வது தெருவில் ரோடு இல்லாமல், மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி நடக்க முடியாத நிலை உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் கூட உள்ள வர முடியவில்லை. பள்ளி மாணவர்கள் ரோட்டில் நடக்க முடியாமல் சிரமப்பட்டு பள்ளிக்குச் செல்கின்றனர்.வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. தெரு விளக்குகள் இல்லை. இருள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் வந்து விடுகின்றன. ரோடு, வாறுகால் அமைக்க பலமுறை ஊராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 8வது தெருவின் கடைசியில் குடிநீர் குழாய் உடைந்து அருகில் உள்ள கழிவு நீர் அதில் கலக்கிறது. ஓராண்டாக இவ்வாறு தான் உள்ளது. ஊராட்சியில் இருந்து இதை சரி செய்ய மெத்தனம் காட்டுகின்றனர். தேவையான இடத்தில் ரோடு அமைப்பதை விட்டுவிட்டு, வீடுகளே இல்லாத இடத்தில் தனியார் நிறுவனத்திற்காக, ஊராட்சியில் இருந்து பேவர் பிளாக் கல் பதித்துள்ளனர்.எங்கள் பகுதிக்கு ரோடு, வாறுகால், தெருவிளக்கு, குடிநீர் வசதிகள் செய்து தர, மாவட்ட நிர்வாகம் தான் ஊராட்சிக்கு உத்தரவிடவேண்டும், என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X