நரிக்குடி, நரிக்குடி ஒட்டங்குளத்தில் அய்யனார், கருப்பணசாமி வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.முதலில் உள்ளூர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு பின், மற்ற காளைகளை அவிழ்த்து விட்டனர். திமிறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தினர். சில காளைகள் வீரர்களுக்கு அடங்காமல் வெற்றி நடை போட்டது. அடங்காத காளைகளுக்கும், அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 500 காளைகளைக்கு ஆன்லைன் விண்ணப்பம் வரப்பெற்றன. 243 காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு 25 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். திருச்சுழி டி.எஸ்.பி., மதியழகன் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.