மாவட்ட அரசு மருத்துவமனையில் 'சிசிடிவி கேமரா'க்கள் திட்டமிட்டு பழுது | தேனி செய்திகள் | Dinamalar
மாவட்ட அரசு மருத்துவமனையில் 'சிசிடிவி கேமரா'க்கள் திட்டமிட்டு பழுது
Added : மே 25, 2022 | |
Advertisement
 

பெரியகுளம், :பெரியகுளம் அரசு மருத்துவமனையில் 15 கண்காணிப்பு கேமராக்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை இரவில் நெஞ்சுவலி என துடிதுடித்து வந்தால் கூட அலட்சியமாக டாக்டர் இல்லை என கூறி முதலுதவி அளிக்காமல் தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும் அவலம் தொடர்கிறது. இங்குள்ள சில டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் இரவு பணியை விரும்புவதில்லை. சுழற்சி முறையில் இரவு பணி வரும் போது சம்பந்தப்பட்ட சிலர் ஒரு மணிநேரம் பணி செய்துவிட்டு ஓய்வு அறைக்கு சென்று கதவை மூடிக்கொள்கின்றனர். இரவில் வரும் நோயாளிகள் சிகிச்சை பெற டாக்டர் பற்றி கேட்டால் 'ரவுண்ட்ஸ்' சென்றுள்ளதாக கூறி அலைகழிப்பு செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன் சமூக ஆர்வலர்கள் இரவில் சில டாக்டர்கள், பணியாளர்கள் கடமையை செய்வதில்லை என புகார் கூறினர், இதற்கு ஆதராமாக கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்ய நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். இப் பிரச்னை எழுத்த பின் நான்கு மாதங்களாக மருத்துவமனையில் உள்ள 15 கண்காணிப்பு கேமராக்கள் அடுத்தடுத்து பழுதாகியது. அதை சரி செய்ய நிர்வாகம் ஆர்வம் காட்டாது ஏன் என சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X