புவனகிரி:புவனகிரியில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் 6வது மாவட்ட மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.மாவட்ட துணைத் தலைவர்கள் விஸ்வநாதன், சுந்தரமூர்த்தி, ராமலிங்கம், இணை செயலாளர்கள் சிவப்பிரகாசம், ரங்கநாதன், ரத்தினவேல், மதன், அசோக், தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட சிறப்புத் தலைவர் சுப்ரமணியன் மாநாடு கொடியை ஏற்றினார்.
சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் கருப்பையன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் திருமுருகன் வேலை அறிக்கை, மாவட்ட பொருளாளர் செல்வராஜ் நிதிநிலை அறிக்கை சமிர்பித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் பழனிவேல், மாநிலக்குழு கிருஷ்ணமூர்த்தி, மாநில துணைத் தலைவர் சங்கமேஸ்வரன், மாவட்ட குழு ராஜமாணிக்கம் வாழ்த்தி பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன் நிறைவுரையாற்றினார்.