நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக வசூலிக்க உத்தரவு | தேனி செய்திகள் | Dinamalar
நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக வசூலிக்க உத்தரவு
Added : மே 25, 2022 | |
Advertisement
 

நகராட்சிகளின் மண்டல இயக்குனர், நகராட்சிகளில் உயர்த்தப்படாத, நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக வசூலிக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி தேனி நகராட்சியில் ரூ.10 கோடி வரை வரி பாக்கி நிலுவையில் உள்ளது.

நடப்பாண்டில் ரூ.33 லட்சத்து 33 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள வரித் தொகையை செலுத்த கோரி நகராட்சி நிர்வாகம் ஆட்டோ, துண்டு பிரசுரங்கள் மூலம் பிரசாரம் செய்து வசூல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. ஆனால் பயன் இல்லை.

எச்சரிக்கை

இந்நிலையில் வரியின கட்டணங்களை 2 மடங்காக உயர்த்தி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் புதிய வரியினங்கள் 2022 ஏப்., 1 முதல் கணக்கிட்டு வரும் ஜூலை 1ல் இருந்து வசூலிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. புதிய வரியினங்கள் தவிர்த்து, பழைய வரியை செலுத்தாதவர்கள் ஜூன் 30க்குள் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே நிலைதான் மற்ற நகராட்சிகளுக்கும் உள்ளது.கமிஷனர் வீரமுத்து குமார் கூறுகையில், ஜூன் 30க்குள் நிலுவைத் தொகையை வசூலிக்க அனைத்து நகராட்சிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் வசூல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.'' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X