முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூன் 1ல் நீர் திறக்க வலியுறுத்தல் கம்பம் விவசாயிகள் வேண்டுகோள் | தேனி செய்திகள் | Dinamalar
முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூன் 1ல் நீர் திறக்க வலியுறுத்தல் கம்பம் விவசாயிகள் வேண்டுகோள்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

கம்பம், :கம்பம் பள்ளதாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூன் 1ல் தண்ணீர் திறக்க கம்பம் விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.முல்லைப்பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக இருபோகம் என்பது கை விட்டு போய்விடுமோ என்ற நிலை இருந்தது. ஆனால் மழை சரியாக பெய்ததால் இரு ஆண்டுகளாக இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.70 அடியாக உள்ளது. (அணையின் முழு கொள்ளவு 152 அடி). அணைக்கு வினாடிக்கு 506 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வெளியேற்றப்படுகிறது. கடந்த 2021 ல் இதே நாளில் 129.35 அடி இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டு 112 அடிதான் இருந்தது. 112 அடி இருந்தாலே நாற்றாங்கால் வளர்க்க தண்ணீர் திறக்கலாம் என்ற பொதுப்பணித்துறை நடைமுறை உள்ளது. எனவே, இந்தாண்டு அணையின் நீர் மட்டம் திருப்தியாக உள்ளதால் அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கம்பம் விவசாயிகள் சங்கத் தலைவர் ஒ.ஆர்.நாராயணன், செயலாளர் சுகுமாறன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X