வாழ்ந்து காட்டுவோம் திட்டம்உலக வங்கி குழுவினர் ஆய்வு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கடலுார்:உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறையின் கீழ் செயல்படக்கூடிய வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர்.


குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, அண்ணாகிராமம் வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளான சமுதாய பண்ணை பள்ளி, சமுதாய திறன் பள்ளி, உற்பத்தியாளர் குழு மற்றும் தொழில் குழு செயல்பாடுகளை உலக வங்கி குழு பிரதிநிதி ஷோவிக் அர்ஷியா மற்றும் மாநில அலுவலக வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை இயக்க அலுவலர் அருள் அரசன், இளம் வல்லுனர் நசீர் கள ஆய்வு செய்தனர்.
கல்குணம் ஊராட்சியில் காளான் வளர்ப்பு குறித்த சமுதாய பண்ணை பள்ளி, ஆடூர் அகரம் ஊராட்சியில் குயவர்களை கொண்டு அமைக்கப்பட்ட செல்வ விநாயகர் மண் பாண்டம் தொழில் குழு செயல்பாடுகள், நவீன முறை மாண்பாண்ட உற்பத்தி குறித்து பத்மஸ்ரீ முனுசாமி பயற்றுனரால் நடத்தப்பட்டு வரும் சமுதாய திறன் பள்ளி, வழுதலம்பட்டு மணிலா சாகுபடி குறித்த சமுதாய பண்ணை பள்ளி, சிலம்பிநாதன்பேட்டையில் பலா மதிப்பு கூட்டுதல் தொடர்பான சமுதாய திறன் பள்ளி, சாத்திப்பட்டு முந்திரி உற்பத்தியாளர்கள் நிறுவன செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது குறிஞ்சிப்பாடி வட்டார மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை திறந்து வைக்கப்பட்டது.பாரத ஸ்டேட் வங்கி நெய்வேலி கிளையின் மூலம் தனிநபர் தொழில் முனைவோர்க்கு ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.அனைத்து ஊராட்சிகளின் தொழில் சமூக வல்லுனர்களுடன் கலந்தாலோசனை செய்தனர்.
கள ஆய்வின் போது மகளிர் திட்டம், திட்ட இயக்குனர் செந்தில் வடிவு, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி, பாரத ஸ்டேட் வங்கி நெய்வேலி மற்றும் இந்தியன் வங்கி குறிஞ்சிப்பாடி கிளை மேலாளர்கள் திட்ட பணியாளர்கள், தொழில் நுட்ப ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X