போலீஸ் செய்திகள் ...
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கார் கவிழ்ந்து மதுரை பெண் பலி

வேடசந்துார்: வேடசந்துார் நான்கு வழிச்சாலையில் சென்ற கார் தடுப்பு கல்லில் மோதி கவிழ்ந்ததில் மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த நாகராஜ் மனைவி சங்கரவடிவு 36. பலியானார். இருவர் காயமடைந்தனர். தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றும் நாகராஜ் 42, மனைவி சங்கரவடிவு 36, மகன் சாய் சங்கர் 7,உடன் நேற்று காலை ஈரோட்டில் உள்ள சங்கர வடிவின் பெற்றோர்களை பார்ப்பதற்காக காரில் சென்றனர். காரை நாகராஜ் ஓட்டினார். வேடசந்துார் நான்கு வழிச்சாலை கல்வார்பட்டி அருகே சென்றபோது, சாலையோரம் இருந்த தடுப்பு கல்லில் மோதிய கார் நடுரோட்டில் கவிழ்ந்தது. மூன்று பேரும் காயமடைந்தனர். வேடசந்துார் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் சங்கரவடிவு இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெறுகின்றனர். கூம்பூர் எஸ்.ஐ.,க்கள் சுப்பிரமணி, சந்திரன் விசாரிக்கின்றனர்.அழுகிய நிலையில் ஆண் உடல் திண்டுக்கல்: ரயில்வே ஸ்டேஷன் ரோடு கக்கன் நகர் டீசல் டேங்க் அருகே முட்புதரில் மே 23 ல் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது. 50 வயதுடன், இடது பக்க வயிற்றில் மச்சம்,பிரவுன் கலர் முண்டா பனியன், சிமென்ட் கலர் பேண்ட் அணிந்திருந்தார். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் 94981 01521, 94981 86151 ல் தெரிவிக்க வடக்கு போலீசார் கேட்டுள்ளனர்.பள்ளி மாணவர் மாயம்வடமதுரை: தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் இறுதி பொதுத்தேர்வு எழுதிய பின்னர் வீடு திரும்பவில்லை. வடமதுரை போலீசார் மாயமான மாணவரை தேடுகின்றனர்.பூட்டை உடைத்து திருட்டு பழநி: இந்திரா நகரை சேர்ந்தவர் எல்.ஐ.சி., ஏஜென்ட் சத்தியபாமா 58. குடும்பத்துடன் வெளியூர் சென்றிந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இரண்டு பவுன் நகை திருடப்பட்டது பழநி போலீசார் விசாரிக்கின்றனர். மாயமான ஆட்டோ டிரைவர் பலிவடமதுரை: திருச்சி என்.எம்.கே. காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேந்திரன் 46. சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கால்கள் அடிபட்டு சரிவர நடக்க முடியாமல் இருந்தார். மே 6ல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. திருச்சி கன்டோன்மென்ட் போலீசார் தேடி வந்த நிலையில், வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே நடக்க முடியாமல் படுத்திருந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஇறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.ரோடு மறியல்20 பேர் மீது வழக்குவடமதுரை: வேல்வார்கோட்டை முத்தனாங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணவேணி மகள் சாக்சி 8. மே 22ல் வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டு திண்டுக்கல் அழைத்து செல்லும் வழியில் இறந்தார். ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் அலட்சியமே இறப்பிற்கு காரணம் எனக்கூறி உறவினர்கள், கிராமத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர். சிலர் திருச்சி திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். முத்தனாங்கோட்டை பவுன்ராஜ் 34, பாண்டியன் 35 ,உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.'ஹாரன்' அடித்த போலீசுக்கு அடி எரியோடு: நல்லமனார்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்செல்வன் 30. திருச்சி மாவட்டம் மணிகண்டம் போலீஸ் ஸ்டேஷனில் 2ம் நிலை போலீசாக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் தனது நண்பர் போஜபாலாஜி உடன் டூவீலரில் தோட்டத்திற்கு சென்றார். லக்கம்பட்டி அருகே சென்றபோது டூவீலரிலன் ஹாரனை அடித்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த கணேசன் 43 , ஏன் ஹாரன் அடிக்கிறாய் என கேட்டு தகராறு செய்தார். ஆத்திரமடைந்த காளிதாஸ், உறவினர்களுடன் கல், பாட்டிலால் தாக்கினர். வடமதுரை போலீசார் காளிதாஸ் உட்பட 4 பேரை தேடுகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X