நாய் தொல்லை தாங்க முடியல : பழநி 15வது வார்டு மக்கள் புலம்பல்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

பழநி, :தாங்க முடியாத வகையில் நாய் தொல்லை ,பராமரிப்பின்றி முடங்கிய பூங்கா என பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். லட்சுமிபுரம், வள்ளாளர் தெரு, ஒம் சக்தி கோயில் தெரு, ராஜா நகர், கல்லுகுழி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் , ராஜா நகர் பகுதி பூங்கா பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இங்கு விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளது. பூங்கா புதர்மண்டி கிடக்கிறது. ஆண்டுக்கணக்கில் நிற்கும் மீன்வளத்துறை வாகனங்கள் பழுதடைந்த நிலையில் இவைகள் விஷபூச்சிகளின் புகலிடமாக காட்சியளிக்கின்றன.

தேவை பாதாள சாக்கடை
வினோத்குமார், விடுதி உரிமையாளர் : இங்குள்ள சாலையோரங்களில் மரங்களை நட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு வார்டை அழகுபடுத்தி ஸ்மார்ட் வார்டாக மாற்ற வேண்டும். சாக்கடை பல ஆண்டுகளாக மேம்படுத்த படாமல் உள்ளதால் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப் படுத்த வேண்டும்.

பூங்காவை பராமரியுங்க
ராஜசேகரன்,மளிகை கடை ஊரிமையாளர் : இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளது. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவை பராமரிக்க வழி காண வேண்டும்.

தேவை தராமன சாலை
பொன் முருகன், டூவீலர் சர்விஸ் உரிமையாளர்: சாக்கடை மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாக்கடை அமைக்க வேண்டும். புதிய சாலைகளை அமைக்கும்போது தரமான சாலைகள் அமைத்தால் அடிக்கடி சாலை அமைக்க வேண்டியது இல்லை. பல ஆண்டுகளாக இங்குள்ள படிப்பகம் திறக்கப்படாமல் உள்ளது.

விரைவில் பூங்கா செயல்படும்
கந்தசாமி, நகராட்சி துணைத் தலைவர்: வார்டில் உள்ள ராஜா நகர் பூங்கா சீரமைக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இங்கு தண்ணீர் தொட்டி குழாய்கள் அமைக்க வேண்டும். படிப்பகத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதனைப் பெற்று படிப்பகம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாய் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X