அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News


நத்தம் :திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதியளவில் டாக்டர்கள் இல்லாததால் ,நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை,சுகாதாரநிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. 8 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் மூன்று பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. கிராம மக்கள் பெரும்பாலம் அரசு மருத்துவமனைகளையே நம்பி உள்ளனர். தினசரி காய்ச்சல்,சளி என பல்வேறு நோய்களுக்காக வெளி நோயாளிகள் ஏராளமானோர் வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய டாக்டர்கள் இல்லாமல் பரிதவிக்கின்றனர். பல மருத்துவமனைகளில் பணியாற்றிய டாக்டர்கள் பணி மாறுதலாகி சென்று விட்டனர். இதற்கு மாற்றாக தற்போது வரை டாக்டர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும் எலும்பு முறிவு , மயக்க மருந்து , சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சையில் கூட சிக்கல் நீடிக்கிறது. டாக்டர்கள் பற்றாக்குறையால் இருக்கிற டாக்டர்கள் கூடுதல் நேரம் பணியாற்றும் சூழல் உள்ளது. இவர்களும் விடுப்பில் சென்றால் நோயாளிகள் பாடு அவ்வளவுதான் . தற்போது பணியில் இருக்கும் டாக்டர்கள் காலை 8:00 மணிக்கு பணிக்கு வந்தால் மறுநாள் வரை 24 மணி நேரம் பணி செய்ய வேண்டியதுஉள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். கூடுதல் பணிச் சுமையால் டாக்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ..........நடவடிக்கை எடுங்க டாக்டர்கள் பற்றாக்குறையால் கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் மருத்துவத்திற்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அவசர சிகிச்சைக்கு வருவோரும் வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளுக்கும் ஏற்கனவே பணிச்சுமையில் உள்ள டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் திண்டுக்கல்லுக்கும், மதுரைக்கும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்களின் அடிப்படை தேவையான மருத்துவத்தை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் ,மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ.என்.ராஜா, நத்தம்.................

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X