திண்டுக்கல், :திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் டேக் சார்பில் லீக் போட்டியில் என். பி.ஆர்., அணி வெற்றி ெபற்றது. திண்டுக்கல் ஸ்ரீவி கல்லுாரியில் நடந்த 2வது டிவிஷன் பிரசித்தி வித்யோதயா டிராபி போட்டியில் திண்டுக்கல் ஹரிவர்னா அணி 29.3 ஓவரில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மோகனசுந்தரம் 45, சந்துரு 32 ரன், பனுவலாட்டி 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து ஆடிய ஆரஞ்ச் ஷர்ட்ஸ் அணி 26.5 ஓவரில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது.திண்டுக்கல் பிளே பாய்ஸ் அணி 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. விவேக் 73, மனோஜ்குமார் 58 ரன் எடுத்தனர். அடுத்து ஆடிய திண்டுக்கல் ஸ்கீல் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு தோற்றது. சதீஷ்குமார் 3 விக்கெட் எடுத்தனர்.பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்த 3வது டிவிஷன் பார்ஷன் கோர்ட் டிராபி போட்டியில் திண்டுக்கல் ஆதித் அணி 27.3 ஓவரில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அன்பழகன் 34 ரன், நிதிஷ் 5 விக்கெட் எடுத்தனர். அடுத்து ஆடிய பி.எஸ்.என்.ஏ., அணி 18.5 ஓவரில் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முத்து, வினோத்குமார் தலா 3 விக்கெட் எடுத்தனர்.நான்காவது டிவிஷன் ஓட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் டிராபி போட்டியில் நத்தம் என்.பி.ஆர்., அணி 30 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் எடுத்தது. மோகன் குமார் 100 ரன், சரண் சக்திவேல் 165 ரன்எடுத்து அவுட் ஆகாமல் விளையாடினர். அடுத்து ஆடிய திண்டுக்கல் ஏஞ்சல் காஸ்டர்ஸ் 30 ஓவரில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாம் சுபாஷ் 4 விக்கெட் எடுத்தார்.