தண்ணீர், விதை, உரம் தயார்விவசாயிகளே நீங்கள் தயாரா : * விவசாயிகளே நீங்கள் தயாரா
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


மதுரை, :குறுவை சாகுபடிக்கு ஜூன் 4 ல் பெரியாறு வைகை தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் மதுரை வேளாண் துறை சார்பில் நெல் விதைகள், உரம், இடுபொருட்கள் தயார் நிலையில் உள்ளது.கடந்தாண்டு குறுவையில் 9700 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடியானது. ஜூன் 4 ல் தண்ணீர் திறக்க உள்ளதால் தற்போது அலங்காநல்லுார், வாடிப்பட்டி, மதுரை கிழக்கு, மேற்கு தாலுகா பகுதியில் சாகுபடிக்கு தயாராக உள்ளனர். 9000 எக்டேரில் நெல் பயிரிட வாய்ப்புள்ளதாக வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: விரிவாக்க மையங்களில் ஏ.எஸ்.டி. 16, கோ 51, என்.எல்.ஆர்.34449, ஆர்.என்.ஆர்.15048, ஐ.டபிள்யூ.பி., பி.பி.டி5204, டி.கே.எம்.13, வி.ஜி.டி.1 ரக நெல் விதைகள் 420 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. 50 சதவீத மானியத்தில் விதைகளை வாங்கலாம். யூரியா 1481 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 511, எம்.ஓ.பி. 733, காம்ப்ளக்ஸ் 4407, எஸ்.எஸ்.பி.715 டன் இருப்பு உள்ளதால் விவசாயிகள் தேவையான முன்னேற்பாடுகளை செய்யலாம். மே 30 ம் தேதி 500 மெட்ரிக் டன் யூரியா வரஉள்ளது.நாற்றங்கால் தயாரிக்கும் முன்பாக வயலில் தக்கைப்பூண்டு, சணப்பு, கொழிஞ்சி பசுந்தாள் உரங்களில் ஒன்றை ஏக்கருக்கு 20 கிலோ பயிரிட்டு பூக்கும் முன் மடக்கி உழுதால் நிலத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்கும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X