'கலங்கடித்த' பத்தாம் வகுப்பு கணிதம் : அதிக மதிப்பெண்கள் பெறுவது சவால்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


மதுரை, :பத்தாம் வகுப்பு கணிதம் தேர்வில் மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் பல வினாக்கள் இடம் பெற்றதால் அதிக மதிப்பெண் பெறுவது பெரும் சவாலாக இருக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 'அதிக கடின வினாக்கள் இடம் பெற்றதை வினாத்தாள் தயாரிப்பு குழு கவனிக்க தவறியுள்ளது' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மதுரையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:

'சென்டம்' கடினமாகும்

அஜிதா பாத்திமா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மகபூப்பாளையம்:வரைபடம், செய்முறை வடிவியல் பகுதிகள் எளிதாக இருந்தன. இரண்டு, ஐந்து மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. 'சென்டம்' பெறுவதை கடினமாக்கும் வகையில் பல வினாக்கள் இடம் பெற்றிருந்தன. இருப்பினும் நம்பிக்கையுடன் எழுதியுள்ளோம்.

எதிர்பார்த்த வினாக்கள் இல்லை
மேலின் டேவினா, அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெருங்குடி:ஐந்து மதிப்பெண் பகுதியில் எதிர்பார்த்த அல்ஜிப்ரா பகுதியில் வினாக்கள் இடம் பெறவில்லை. மூன்று வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. இரண்டு மதிப்பெண் பகுதியில் மட்டும் வினாக்கள் எளிமையாக இருந்தன. கட்டாய வினா சற்று கடினமாக இருந்ததை உணர்ந்தோம்.

அதிக மதிப்பெண் கடினமே
கார்த்தி செல்வி, அரசு உயர்நிலை பள்ளி, வேடர்புளியங்குளம்:கணிதத் தேர்வு வினாக்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தன. ஜாமெட்ரி, கிராப் பகுதிகள் எளிமையாக இருந்ததால் அதில் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. 'புக்பேக்' வினாக்களை விட பாடத்திற்குள் இருந்து கேட்கப்பட்டவை அதிகமாக இடம் பெற்றுள்ளன. அதிக மதிப்பெண் பெறுவது கடினம்.

திருப்புதல் தேர்வுகள் கை கொடுத்தது
பாலசுப்பிரமணி, அல்அமீன் மேல்நிலைப்பள்ளி, புதுார்:திருப்புதல், ஆயத்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. யோசிக்கும் வகையில் இடம் பெற்ற வினாக்களும் நம்பிக்கையுடன் எழுதியுள்ளோம். பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சியால் ஒன்று, ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற கடின வினாக்களுக்கும் விடையளித்து விட்டோம்.

என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்

'சென்டம்' சவாலாகும்
நிந்தியா, ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழுமலை: கொரோனா காலத்தில் படித்த மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற எளிமை வினாக்கள் அமையவில்லை. சற்று கடினமாகவே கேட்கப்பட்டுள்ளது. ஒன்று, ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற வினாக்களால் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது சற்று குறையும். அதிக தோல்விகள் இருக்காது. 'சென்டம்' எடுக்க வேண்டும் என்ற இலக்கு வைத்திருந்த மாணவர்கள் 90 மதிப்பெண்கள் வரையே எடுக்கும் வாய்ப்பு இருக்கும். அதிக கடின வினாக்கள் சற்று தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

'சோதனை' வினாத்தாள்
கவிதா, ஆசிரியை, அரசு உயர்நிலை பள்ளி, இனாம்ரெட்டியாபட்டி: சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் ஜாமெட்ரி, கிராப், ஒரு மதிப்பெண் பகுதி வினாக்கள் என 30 மதிப்பெண்கள் எளிதில் எடுத்து விடலாம். நடுநிலையாக, நன்றாக படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு 5, 1 மதிப்பெண் பகுதியில் பல வினாக்களில் 'செக்' வைத்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுவரை நடந்த தேர்வுகளில் கணிதம் கடினமே. சோதனையான வினாத்தாள்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X