மதுரை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறையின் 78 காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 7, 8 பிரிவுக்கான தேர்வு நடக்க உள்ளது. குரூப் 7 பிரிவில் 42 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 கடைசி. பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். எழுத்துத் தேர்வு செப்.,10ல் நடக்கிறது.குரூப் 8 பிரிவில் எழுத்துத்தேர்வு செப்.,11ல் நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., தகுதியுள்ளோர் ஜூன் 18க்குள் விண்ணப்பிக்கலாம்.ஹிந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இலவச பயிற்சி வகுப்பு செவ்வாய், வெள்ளியன்று நடத்தப்பட உள்ளது.இதற்கான பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.in.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.விரும்புவோர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் நகல் மற்றும் விண்ணப்ப படிவத்தின் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரலாம் என துணை இயக்குனர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.