வேலுார் : \ திருவலம் அருகே நகைக்கடை சுவரில் துளையிட்டு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.வேலுார் மாவட்டம், மேல்பாடியைச் சேர்ந்தவர் அனில்குமார், 30. திருவலம் அருகே சேர்க்காடு கூட்டுச்சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இவர் கடைக்கு பக்கத்தில் குளிர்பானக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, அனில்குமார் கடையை மூடி வீட்டுக்கு சென்றார்.
நகைக்கடை லாக்கரை உடைத்து அதிலிருந்த 90 சவரன் தங்க நகை, 100 கிலோ வெள்ளி பொருட்கள், 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.திருடுபோன நகை, பணத்தின் மதிப்பு, 1 கோடி ரூபாய். கொள்ளையர்கள் நகை கடையிலுள்ள கண்காணிப்பு கேமரா ரெக்கார்டரையும் எடுத்துச் சென்றுள்ளனர்.தமிழகம் - ஆந்திரா மாநில எல்லையில் நகைக்கடை உள்ளதால், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என திருவலம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.