விபத்தில் மனைவி இறந்ததை மறைத்து மகள்களை தேர்வுக்கு அனுப்பிய தந்தை; சங்கரன்கோவில் அருகே சோகம்
Added : மே 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


சங்கரன்கோவில் : விபத்தில் மனைவி இறந்த நிலையிலும், மகள்களை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுப்பிய தந்தையின் செயல், கல் மனதையும் கரைய செய்துள்ளது.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், கக்கன் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி; தனியார் 'காஸ்' ஏஜன்சியில் சிலிண்டர் வினியோகம் செய்கிறார்.


\இவரது மனைவி முத்துமாரி, 38. இவர்களுக்கு வாணி ஈஸ்வரி, கலாராணி என்ற பெண் குழந்தைகள் உள்ளனர்.சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாணி ஈஸ்வரி, கலாராணி இருவரும் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, முத்துமாரி சங்கரன்கோவில் குப்பை கிடங்கு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது வேகமாக வந்த கார் மோதியதில், முத்துமாரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மனைவி இறந்து அவரது உ'டல் பிரேத பரிசோதனை அறையில் இருந்த நிலையிலும், மனதை கல்லாக்கிக் கொண்ட பெரியசாமி, தேர்வு எழுத சென்ற மகள்களுக்கு, தாயின் மரண செய்தியை தெரிவிக்கவில்லை.மாலை 5:00 மணிக்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மகள்களிடம், 'அம்மாவிற்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது; பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். 'நீங்கள் இருவரும் நாளை கணித தேர்வை எழுதி முடித்து விட்டு வந்து, அம்மாவை பாருங்கள்' என, பெரியசாமி கூறினார்.

அதை ஏற்ற இருவரும், சித்தி வீட்டிற்கு சென்று, இரவு தங்கி படித்தனர். நேற்று காலை கணித தேர்வு எழுதினர். தேர்வு எழுதி விட்டு வந்த வாணி ஈஸ்வரி, கலாராணி இருவரையும், உறவினர்கள் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.முதலில் ஒன்றும் தெரியாமல் தவித்த சிறுமியர், பின், தங்கள் தாய் இறந்ததை அறிந்து துடித்தனர். விபத்தில் மனைவி இறந்த நிலையிலும், மகள்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்ட பெரியசாமியை பலரும் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-மே-202208:37:37 IST Report Abuse
NicoleThomson மிகவும் வேதனை தரும் செய்தி இதை
Rate this:
Cancel
27-மே-202216:45:00 IST Report Abuse
சூரியா அரசின் பலன்கள் இவர்களைப் போன்றவர்களுக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும். முதல்வரோ, அல்லது உயர் அரசு அதிகாரிகளோ நிச்சயம் பாராட்டி ஆறுதல் கூற வேண்டும்.
Rate this:
Cancel
PADMANABHAN R - Chennai,இந்தியா
27-மே-202211:58:26 IST Report Abuse
PADMANABHAN R படிப்பதற்கே மிகவும் வேதனையாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X