மதுரை, மதுரை தல்லாகுளம் நீர்வளத்துறை நிலவேதியியல் ஆய்வகத்தில் குடி நீர், கட்டுமானம் மற்றும் விவசாய தண்ணீரை பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.தண்ணீரின் கடத்தும் திறன், பி.எச்., அளவு, கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கார்பனேட், பைகார்பனேட், குளோரைடு, சல்பேட், நைட்ரேட், தண்ணீரில் கரையும் தாதுக்கள், நீரின் கடினதன்மை, அமிலத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. குடிப்பதற்கும், கட்டுமானத்திற்கும் பரிசோதனை கட்டணம் ரூ. 250. விவசாய பயன்பாட்டுக்கு ரூ.400. போர்வெல், கிணற்று நீரில் ஒரு லிட்டர் அளவு எடுத்துவர வேண்டும். பொதுப்பணித்துறை வளாகத்தில் உள்ள நிலவேதியியல் ஆய்வகத்தை அணுகலாம்.