திருச்சி : \ திருச்சியில், லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் இறந்தனர்.திருச்சி, காட்டூர் அருகே எல்லக்குடியைச் சேர்ந்தவர் மாதேஷ், 24. இவர், தன் நண்பர் சூர்யா, 27, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு, கொடியாலம் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.நேற்று அதிகாலை,
இருவரும் பைக்கில், சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஜீயபுரம் அருகே சென்ற போது, கரூர் மாவட்டத்துக்கு மரங்கள் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, பைக் மீது மோதி கவிழ்ந்தது.இதில், படுகாயமடைந்த மாதேஷ், சூர்யா சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஜீயபுரம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.