பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு...விழிப்புணர்வு!கண்காணிப்பு அலுவலர் உத்தரவு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு...விழிப்புணர்வு!கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர்:''பயிர் காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகளவிலான விவசாயிகளை, இத்திட்டத்தில் இணைக்க வேண்டும்,'' என, கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் உத்தரவிட்டார்.திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.


இடுவாய் ஊராட்சி பகுதியில் நடக்கும் வேளாண் பணிகள், கால்நடை பராமரிப்புத்துறை பணிகளை ஆய்வு செய்தார். இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் - திருப்பூர் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும், மூங்கில் பூங்கா பணிகளை நேரில் பார்வையிட்டார்.தொடர்ந்து, நேற்று மாலை, மாவட்ட அளவிலான வளர்ச்சி பணி முன்னேற்றம் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.அதில், கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியின், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை, விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
ஒவ்வொரு அரசுத்துறையும், மாவட்டத்துக்கு வழங்கியுள்ள இலக்கை நிறைவேற்ற வேண்டும். அரசு திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.குறிப்பாக, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.விவசாயிகள், பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைவது குறைவாக இருக்கிறது.வட்டாரம் வாரியாக, பயிர் காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகப்படியான விவசாயிகளை, காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X