திருப்பூர்;கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள், நிவாரண உதவி பெற, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.கொரோனா தொற்றால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது. அத்துடன், அரசு விடுதிகளில் முன்னுரிமை அளித்து, கல்வி, விடுதி செலவுகளையும் அரசே ஏற்கிறது.
பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. பெற்றோரை இழந்து, உறவினர் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு, மாதம், 3,000 ரூபாய் வீதம், 18 வயது பூர்த்தியடையும் வரை, பராமரிப்பு தொகையும் வழங்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட குழந்தைகள், இத்தகைய உதவியை பெற, கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6வது தளத்தில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.