திருப்பூர்:முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்த அவதுாறாக பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பில், 'முன்னாள் பிரதமர் மற்றும் ராஜிவ், கரூர் எம்.பி., ஜோதிமணி குறித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் மாநகர மற்றும் வடக்கு மாவட்ட இளைஞர் காங்., சார்பில், மாநக ராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.