திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கிழக்கு ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், ராக்கியாபாளையம் பிரிவு அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், 'வரும், 29ம் தேதி, அனைத்து வார்டு, ஊராட்சி பகுதியில் ஊழியர் கூட்டம், பொறுப்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி நடத்துவது,' என முடிவெடுக்கப்பட்டது.இதில், செந்தில்குமார், சந்துரு, சரவணன், ரவி, ஆனந்த், ராஜ்குமார், ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.