பள்ளி செல்லா குழந்தைகள் பற்றி கணக்கெடுப்பு துவக்கம்!இடைநிற்றலை தவிர்க்க முயற்சி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பள்ளி செல்லா குழந்தைகள் பற்றி கணக்கெடுப்பு துவக்கம்!இடைநிற்றலை தவிர்க்க முயற்சி
Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
Latest district News

பெ.நா.பாளையம்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் வாயிலாக, கோவை மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி, நடந்து வருகிறது.கோவை மாவட்டத்தில், 15 வட்டார வள மையங்களுக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில், 5 முதல், 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.


கடந்த 20ம் தேதி தொடங்கிய இக்கணக்கெடுப்புப் பணி, வரும், 1ம் தேதி வரை நடைபெறுகிறது.இப்பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்படுகிறது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தடாகம், கணுவாய், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்பது கிராம ஊராட்சி, ஒரு நகராட்சி, மூன்று பேரூராட்சிகளில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் கூறியதாவது:பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், பழ கடைகள், காய்கறி கடைகள், கட்டுமான பணி நடைபெறும் இடங்கள், தொழிற்சாலைகள், விவசாய பணி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்கிறோம்.கணக்கெடுப்பு பணியின்போது கண்டறியப்படும் குழந்தைகள், உடனடியாக அப்பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அவர்களது தொடர்ச்சியான கல்வி கற்றலை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் விவரங்களை அருகில் உள்ள பள்ளி அல்லது வட்டார கல்வி அலுவலகங்களுக்கு தகவல் அளித்து, அக்குழந்தைகளின் கல்வி கற்றலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கக்கூடிய மாணவர்களின் முகவரிகளை சேகரித்து, அவர்களையும் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X