திருவள்ளூர்:ஆவின் நிறுவனத்தில், ஏழு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் - -திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஆவின் பொது மேலாளர் ஜெயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆவின் ஒன்றியத்தில், 564 பிரதம தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து, நாள்தோறும், ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ், ஒப்பந்த அடிப்படையில், காலியாக உள்ள ஏழு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு, விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.வரும் 1ம் தேதி, காலை 11:00 மணியளவில், தங்களின் முழு விபரம், பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ ஆணை சான்றிதழ்களுடன், காஞ்சிபுரம் - -திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைமை அலுவலகம், அயன்புரம், சென்னை- 23ல் நடைபெறும் நேரடி நியமன தேர்வில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.