பூங்கா, குளம், கழிவறைகளை பராமரிக்க பொதுமக்களுக்கு உழவர்கரை நகராட்சி அழைப்பு | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
பூங்கா, குளம், கழிவறைகளை பராமரிக்க பொதுமக்களுக்கு உழவர்கரை நகராட்சி அழைப்பு
Added : மே 25, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி:நீர்நிலை, பூங்கா, சாலை மற்றும் பொது கழிவறைகளை, பொதுமக்களின் பங்களிப்புடன் பராமரித்திட உழவர்கரை நகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில், உழவர்கரை நகராட்சி பகுதி வளர்ந்து வரும் நகரப் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இப்பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நகராட்சி நிர்வாகம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், குளங்கள், பூங்காக்கள், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறைகளை பராமரிப்பு பணிகளை பொதுமக்களின் பங்களிப்போடு செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, முத்திரையர்பாளையத்தில் உள்ள ஆயி குளத்தை பராமரிக்க ஆண்டிற்கு ரூ.2.40 லட்சம் தேவை உள்ளது.

அதேபோன்று, பெரியவாணமடு குளம் பராமரிப்பு பணிக்கு ரூ.90 ஆயிரம், குறிஞ்சி நகர் சிறுவர் பூங்கா, விமான நிலைய சாலை மேம்படுத்தி பராமரித்திட ரூ.2.40 லட்சம் தேவைப்படுகிறது. ஜவகர் நகர், பாவாணர் நகர், பூமியான்பேட், பிச்சைவீரன்பேட் பகுதிகளில் உள்ள சமுதாய கழிப்பிடங்கள், அஜிஸ் நகர் மார்க்கெட், வெங்கட்டா நகர் பார்க், ஜீவா நகர், இந்திரா நகர், காலாப்பட்டு பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை பராமரித்திட ஆண்டிற்கு தலா ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது.
இந்த பொதுநலப் பணிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள தன்னார்வல அமைப்புகள், பொதுமக்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தொழிலதிபர்கள், குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தினர் உழவர்கரை நகராட்சியை, 94884 47777, 94433 71672 ஆகிய மொபைல் எண்கள் அல்லது 0413-2201142 என்ற தொலைபேசி எண் அல்லது om.pon@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X