துணிப்பை விழிப்புணர்வு:கவர்னர் பாராட்டு | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
துணிப்பை விழிப்புணர்வு:கவர்னர் பாராட்டு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி:புதுச்சேரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்திட மக்களுக்கு துணிப்பை வழங்கும் விழிப்புணர்வு முயற்சிக்கு, கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துமாறு, பிரான்சில் வசிக்கும் மாரிசாமி பத்திரிசியா, ரெஜிஸ் ஆகியோர், பொதுமக்களுக்கு துணிப்பைகளை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், இலவச துணிப்பைகளை பார்வையிட்டு, கவர்னர் தமிழிசை பாராட்டினார். தன்னார்வலர்கள் ராஜா, வினோத், கதிர், ரவி, மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X