பெண்ணுக்கு மிரட்டல்போலீசார் விசாரணை | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
பெண்ணுக்கு மிரட்டல்போலீசார் விசாரணை
Added : மே 25, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி:பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சுகன்யா. இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தாய் மற்றும் சகோதரியுடன் வசிக்கிறார். சுகன்யாவை பிரிவதற்கு முன்பாக அவரது தாயின் மருத்துவ செலவுக்கு, காலாப்பட்டை சேர்ந்த தமிழரசன் என்பவரிடம், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கி கணவர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சுகன்யாவின் கணவரிடம் தமிழரசன் பணத்தை திருப்பிக் கேட்டபோது பிரிந்து வாழ்வதாக கூறினார். அதனைத் தொடர்ந்து, சுகன்யா வீட்டிற்குள் தமிழரசன் அத்துமீறி நுழைந்து பணத்தை திருப்பிக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X