மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை
Added : மே 25, 2022 | |
Advertisement
 

அரியாங்குப்பம்:அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீடுகளில் சிலர், முன் அனுமதியின்றி குழாய் மூலம் குடிநீர் எடுத்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது, சட்டப்படிகுற்றமாகும்.இந்த அறிவிப்பு வெளியான 7 தினங்களுக்குள், வீட்டின் பத்திரம் மற்றும் பட்டா நகலை சமர்ப்பித்து, அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி குடிநீர் இணைப்பை முறைப்படுத்தி கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு எந்தவித அறிவிப்பும் இல்லாமல்துண்டிக்கப்படும்.மேலும், சிலர் மின் மோட்டாரை வைத்து குடிநீரை உறிஞ்சுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. எனவே, மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, ஆணையர் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X