விவசாய பயனாளிகள் பட்டியல்தோட்டக்கலை சங்கம் வெளியீடு | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
விவசாய பயனாளிகள் பட்டியல்தோட்டக்கலை சங்கம் வெளியீடு
Added : மே 25, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி:வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் செயல்படும், புதுச்சேரி மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் சார்பில், விவசாய பயனாளிகள் தணிக்கைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குனர் சிவராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:புதிய பழத் தோட்டம் அமைத்தல், பாரம்பரிய மலர்கள், வாழை (திசு), கட்டை வாழை, வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பயிர் செய்வோர், மூடாக்குகள் போன்ற வகைகளை சாகுபடி செய்யும் மற்றும் செயல்படுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பயிர் சாகுபடிக்கு பிந்தைய மானிய தொகை அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 2022-2023ல் மண்புழு உரம் உற்பத்தி தொட்டி அமைக்க விண்ணப்பித்தவர்கள் மற்றும் தைப்பட்டம் 2021ல் தோட்டக்கலை சாகுபடி செய்து, விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக புதுச்சேரி பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் மே 24ம் தேதி (நேற்று) முதல் வரும் 2ம் தேதி வரை ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைய தளம் (https://agri.py.gov.in) என்ற முகவரியிலும் வெளி யிடப்பட்டுள்ளது.இந்த பட்டியிலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், வரும் ஜூன் 2ம் தேதிக்குள், புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் ( தோட்டக்கலை) அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X