பாகூர்:காரை அடமானம் வைத்து மோசடி செய்த செஞ்சியை சேர்ந்த டிவைர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
.பாகூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஞானசக்தி ராஜா, 36; யூனியன் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மாமனார் முருகனுக்கு சொந்தமான டி.என். 02 பிஏ 6343 என்ற பதிவெண் கொண்ட மாருதி சுவிப்ட் காருக்கு, தனது நண்பர் செஞ்சியை சேர்ந்த ஆரோக்கியநாதனை டிரைவர் பணியில் சேர்த்துள்ளார். பின், கடந்த 2019ம் ஆண்டு, ஆரோக்கியநாதன் தனது சொந்த வேலைக்காக காரை எடுத்து சென்றார்.
பின், அவர் காரை கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கவில்லை. காரை கேட்டபோது, ஆரோக்கியநாதன் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதற்கிடையே, 2020ம் ஆண்டு, ஆரோக்கியநாதன், சிறுவந்தாட்டை சேர்ந்த மதன் என்பவரிடம் காரினை அடமானம் வைத்திருப்பது ஞானசக்திராவுக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, ஞானசக்திராஜா, பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், செஞ்சி வரிக்கலை பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஆரோக்கியநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.