மனைவியை தாக்கியதாக கணவர் மீது வழக்கு பதிவு | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
மனைவியை தாக்கியதாக கணவர் மீது வழக்கு பதிவு
Added : மே 25, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி:புதுச்சேரி, ரெயின்போ நகர், 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருண்; வெளிநாட்டில் கப்பல் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கலைவாணி, 30, என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.கணவர் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றதாலும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் கலைவாணி தனது மகன்களுடன் சாரம் சக்தி நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், வெளிநாட்டில் இருந்து அருண் வீட்டிற்கு வந்துள்ளார். இதையறிந்த கலைவாணி 2 குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அருண், அவரது தாய் ரங்கநாயகி ஆகியோர் கலைவாணியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் கலைவாணி புகார் அளித்தார். புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X