புதுச்சேரி:சாலைகளில் வீட்டிற் காக சாய்வு தளம் அமைக் கும்போது, வழிமுறைகளை பின்பற்ற வேண்டு மென, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நகராட்சி சாலைகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் வாகனங்கள் கொண்டு செல்ல ஏதுவாக சாய்வு தளம் அமைத்துள்ளனர். இது, சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் மேல் கான்கிரீட் பலகை கொண்டும், சாலைகளில் அதிகப்படியான நீளத்திற் கும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், கீழே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. துாய்மை பணி மேற்கொள்ள சிரமமாக உள்ளது.மேலும், சாலையின் அகலம் குறுகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. 20 அடி அல்லது அதற்கு குறைவான அகல மான சாலைகளில் வீட்டின் எல்லையில் இருந்து 45 செ.மீ., நீளத்திற்கு மிகாமல் தேவைக்கு மட்டுமே சாய்வு தளம் அமைக்க வேண்டும்.முழுதும் கான்கிரீட் பலகை கொண்டு அமைக்கக் கூடாது.
எளிதில் சுத்தம் செய்யும் வகையில் இரும்பு கிரில் கொண்டு அமைக்க வேண்டும். 20 அடிக்கு மேல் அகல மான சாலைகளில் வீட்டின் எல்லையில் இருந்து 75 செ.மீ., நீளத்திற்கு மிகாமல் அனுமதி பெற்று சாய்வு தளம் அமைக்க வேண்டும்.ஆனால், அதிகப்படியான அகலமான 30 செ.மீ., நீளத்திற்கு தரை வாடகை நகராட்சிக்கு செலுத்த வேண்டும். 75 சென்டி மீட்டருக்கு மேல் சாய்வு தளம் அமைக்க அனுமதி கிடையாது. இந்த வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.