பட்டாசு வெடித்து விவசாயி காயம் | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
பட்டாசு வெடித்து விவசாயி காயம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

அரியாங்குப்பம்:தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் சின்னமந்தை, மேற்கு தெருவை சேர்ந்தவர் வேணு, 63; விவசாய வேலை செய்து வருகிறார்.
இவர், கடந்த தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு களை வாங்கி, வெடித்தது போக மீதி இருந்த இரண்டு பாக்கெட் காக்கி பட்டாசுகளை வீட்டில் வைத்திருந்தார்.இந்நிலையில், வேணு நேற்று மதியம் வீட்டில் ேஷாபாவில் உட்கார்ந்திருந்தார். அப்போது,ஷோபா அடியில் வைத்திருந்த பட்டாசு திடீரென வெடித்தது. இதில் காலில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார், வேணுவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி பத்மாவிடம் விசாரணை நடத்தினர். கோடை வெயில் கொளுத்தி வருவதால் அதிக வெப்பம் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியது தெரிய வந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X