புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தமத்திய அரசு உதவ வேண்டும்: சபாநாயகர் | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தமத்திய அரசு உதவ வேண்டும்: சபாநாயகர்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி:புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என மத்திய அமைச்சரிடம், சபாநாயகர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டில்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம், நேற்று காலை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்தும், அதற்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
பின், சபாநாயகர், மத்திய அமைச்சரிடம் புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு மேலும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், மணவெளி தொகுதிக்கு உட்பட்ட சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதி 'நீலக்கொடி விருது' பெற்றுள்ளது.இதற்கான விழாவில் பங்கேற்ற அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.அப்போது, எம்.எல். ஏ.,க்கள் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக், பா.ஜ., மாநில துணைத் தலைவர் அருள்முருகன், மாநில பொருளாதாரப் பிரிவு அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X