போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதில் அதிகாரிகள்...மெத்தனம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர்கள் அகற்றியும், அதிகாரிகளின் மெத்தனத்தால் அந்த இடத்தை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பயன்படுத்தாமல், வெற்றிடமாக விட்டு வைத்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி நகர பகுதியின் மையமான நான்கு முனை சந்திப்பு மிகக் குறுகலாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நான்கு முனை சந்திப்பையொட்டி, பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், அரசு பெண்கள் பள்ளி இருப்பதால் இந்த சந்திப்பு எப்போதும் நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வந்தது.
அத்துடன் இந்த பகுதியிலேயே சாலையை அடைத்தபடி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியைச் சுற்றிலும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.இதனால் நகரின் முக்கிய பகுதியான நான்கு முனை சந்திப்பில், கரும்பு வாகனங்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு, தினசரி நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை இருந்து வந்தது.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழ் பலமுறை படத்துடன் செய்தி வெளியிட்டதன் மூலம் கடந்த மே மாதம் 6ம் தேதி, அங்கிருந்த அரசு பெண்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டு, சாலையோர டிரான்ஸ்பார்மர்கள் இரண்டும் அகற்றி உட்புறமாக மாற்றி வைக்கப்பட்டது. இதனால் நான்கு முனை சந்திப்பில் சாலைகள் அகலமாகி, அவ்வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் கரும்பு ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும் எந்த ஒரு நெரிசலிலும் சிக்காமல் செல்ல வழி ஏற்பட்டது.
இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.ஆனால், அதிகாரிகளின் எவ்வித திட்டமிடலும் இல்லாததால், ஓராண்டிற்கு மேலாகியும் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் தார் சாலை அமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படாமல், அங்கே கூரை கொட்டகைகள் அமைத்து தண்ணீர் பந்தல் போன்ற போக்குவரத்து அல்லாத பயன்பாட்டிற்கான இடமாக மாற்றி வருகின்றனர்.அத்துடன் அந்த பகுதி போலீசார் பேரிகார்டுகளை அடுக்கி வைத்து, ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தவிர்த்து வருகின்றனர்.
எதற்காக அந்த இடத்தில் மதில் சுவர் இடிக்கப்பட்டு, டிரான்ஸ்பார்மர்கள் அகற்றப்பட்டன என்பது தெரியாமலேயே ஓராண்டு காலம் கடந்தும் விரிவாக்கம் செய்யப்பட்ட இடம் போக்குவரத்துக்கான தீர்வாக பயன்படுத்தப்படாமல், வெற்றிடமாக மாறியுள்ளது இப்பகுதி மக்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நான்கு முனை சந்திப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் தார்சாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று நகரின் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விரிவாக்கம் செய்து கள்ளக்குறிச்சியில் வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X