தேசிய மல்யுத்த போட்டிபுதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
தேசிய மல்யுத்த போட்டிபுதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி:தேசிய சப் ஜூனியர் மல்யுத்த போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்களும், வீராங்கனைகளும் ராஞ்சிக்கு புறப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய அளவிலான சப் ஜூனியர் மல்யுத்த போட்டி நாளை 26ம் தேதி துவங்கி, 29ம் தேதிவரை நான்கு நாட்களுக்கு நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக, புதுச்சேரி அரசு பதிவு பெற்ற யுனைடெட் புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் தொழில்நுட்பக் குழு, மாணவ, மாணவிகளுக்கு ஒரு மாதம் சிறப்பு பயிற்சி அளித்தது.
அதில் தேர்வு செய்யப்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு, புதுச்சேரி யுனைடெட் மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் வினோத் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி, தேசிய மல்யுத்த போட்டிக்கு வழியனுப்பி வைத்தார்.நிகழ்ச்சியில் பொருளாளர் சோமசுந்தரம், நிர்வாகிகள் தங்கபாண்டியன், சண்முகபிரியா, கார்த்திகேயன், காமேஷ்வரன், பிரவீன் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் வசந்த் செய்திருந்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X