சாலை பணிக்கு பூமி பூஜை | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
சாலை பணிக்கு பூமி பூஜை
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி:ஊசுடு தொகுதியில் 3.70 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை, அமைச்சர் சாய் சரவணன் குமார் துவக்கி வைத்தார்.
ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு பகுதியில் இருந்து, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம் வழியாக உளவாய்க்கால் வரை உள்ள சாலை மற்றும் ராமநாதபுரம் மாஞ்சாலையில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட உள்ளது.

பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இப்பணியை, அமைச்சர் சாய் சரவணன்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர் நடராஜன் மற்றும் ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X