புகார் பெட்டி | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
புகார் பெட்டி
Added : மே 25, 2022 | |
Advertisement
 

ஆக்கிரமிப்பால் சிக்கல்

மதகடிப்பட்டு சாலையில் இருந்து, சன்னியாசிக்குப்பம் வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் விபத்துகள் நடக்கிறது.பாண்டுரங்கன், கலிதீர்த்தாள்குப்பம். கழிவுநீரால் துர்நாற்றம் நெட்டப்பாக்கம் நேரு நகரில் போலீஸ் நிலையத்திற்கு அருகில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ராமன், நெட்டப்பாக்கம். வாய்க்காலில் அடைப்புஅரும்பார்த்தபுரம் மெயின்ரோட்டில் இருபுறமும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுகழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மோகன், அரும்பார்த்தபுரம்.

குடிநீர் இல்லாததால் அவதி

பாரதி பூங்காவில் சுத்திகரிப்பு குடிநீர் டேங்க் இருந்தும் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர். ரத்தினவேலு, புதுச்சேரி. மின் விளக்கால் அபாயம் முத்தரையர்பாளையம் காந்தி வீதியில் மின்கம்பத்தில் மின்விளக்கு தொங்கியவாறு கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.விஜயகுமாரி, காந்தி திருநல்லுார். நாய் தொல்லை அதிகரிப்பு பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு விநாயகர் கோவில் தெருவில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.

தனஞ்ஜெயன், பிள்ளைச்சாவடி.
வீணாகும் குடிநீர் கோரிமேடு
போலீஸ் குடியிருப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. நேதாஜி, கோரிமேடு.போக்குவரத்துக்கு இடையூறு செட்டித் தெரு - பாரதி வீதி சந்திப்பில் உடைந்து கிடக்கும் குப்பை தொட்டி அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

பொன்ராஜ், புதுச்சேரி


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X