தடையில்லா சான்றிதழ் கேட்டுகலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
தடையில்லா சான்றிதழ் கேட்டுகலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி:ஆட்டுப்பட்டியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு, நகராட்சியின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மனு அளித்தார்.
உப்பளம் தொகுதி ஆட்டுப்பட்டியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு, முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, கலெக்டர் வல்லவனை சந்தித்து பேசினார்.
அப்போது, உப்பளம் தொகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் 65 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நகராட்சியின் தடையில்லா சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால், நகராட்சி இழப்பீட்டு தொகை கேட்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இழப்பீடு தொகை தர முடியாது.

எனவே, நகராட்சியிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும். இல்லையெனில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது கானல் நீராகிவிடும். அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகிவிடும்' என மனு அளித்தார்.மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக நகராட்சிக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X