வரி விலக்கு தரக் கூடாது: பா.ஜ., தலைவர் வலியுறுத்தல் | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
வரி விலக்கு தரக் கூடாது: பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி:'நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வரிச் சலுகை தரக் கூடாது' என, மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வெளியாகி உள்ள உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்திற்கு, வரி விலக்கு கேட்டு புதுச்சேரி தி.மு.க.,வினர் கடிதம் அளித்து உள்ளனர். இந்த படத்தினால் சமூகத்துக்கு விளையக் கூடிய நன்மை என்ன.

இதற்கு முன் பல நல்ல கருத்துகளை கொண்ட படங்களும், தேசபக்தியை வெளிப்படுத்திய படங்களும் எத்தனையோ வெளியாகி உள்ளன.அந்த திரைப்படங்களுக்கு எல்லாம் வரி விலக்கு கேட்காத தி.மு.க.,வினர், திடீரென இந்த படத்திற்கு மட்டும் வரி விலக்கு கேட்பது ஏன்? தங்களின் விசுவாசத்தை காண்பிப்பதற்காகவே தவிர, தேச நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் இல்லை.

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து சமூக மக்களும் பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க., நினைக்கிறது. எனவே, நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வரி விலக்கு அளிக்கக் கூடாது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X