மின்மாற்றியில் ஏறி வாலிபர் மிரட்டல்புதுச்சேரி ராஜிவ் சிக்னலில் பரபரப்பு | செய்திகள் | Dinamalar
மின்மாற்றியில் ஏறி வாலிபர் மிரட்டல்புதுச்சேரி ராஜிவ் சிக்னலில் பரபரப்பு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி:புதுச்சேரியில், மின்மாற்றியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள ராஜிவ் சிக்னலில் நேற்று காலை 10:00 மணியளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

அப்போது, 25 வயது வாலிபர் வழுதாவூர் சாலை ஓரம் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அவர் திடீரென, லுமினாஸ் கம்பெனி நுழைவு வாயில் அருகே உள்ள உயர் அழுத்த மின்மாற்றி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்து மின்மாற்றியிலேயே நின்று கொண்டிருந்தார்.

இதனால், அப்பகுதியியில் பரபரப்பு நிலவியது.கோரிமேடு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அந்த வாலிபரை கீழே இறங்குமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்தனர். மின் ஊழியர்கள் மின் வினியோகத்தை துண்டித்தனர். அவ்வழியே சென்ற லாரி மீது தீயணைப்பு வீரர்கள் ஏறி, மின்மாற்றி அருகே நிறுத்தி, வாலிபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர், வாலிபரை தாக்க முயன்றனர். அவர்களை தடுத்து போலீசார், வாலிபரை பாதுகாப்பாக ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த அய்யப்பன், 26, என்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள மொபைல் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.அவரை போலீசார் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் நேற்று காலை தப்பி வந்து மீண்டும் மின்மாற்றியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார், பெரிய முதலியார்சாவடியில் உள்ள அய்யப்பனின் உறவினரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவத்தால், ராஜிவ் சிக்னல் பகுதியில் 30 நிமிடம் பரபரப்பு நிலவியது. இதேபோன்று, கடந்த வாரம், புதுச்சேரி ரயில் நிலையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த மனநிலை பாதித்த முதியவர் ரயில் மின் கம்பத்தில் ஏறி அமர்ந்து, பரபரப்பை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்கது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X