'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சிபுதுச்சேரியில் 28ம் தேதி துவக்கம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

புதுச்சேரி:மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டிட, 'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் கல்வித் திருவிழாவான 'வழிகாட்டி' நிகழ்ச்சி, புதுச்சேரியில் வரும் 28ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என புரியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில், இந்த மெகா கல்வித் திருவிழா நடக்க உள்ளது. புதுச்சேரி, சித்தன்குடி, பாலாஜி தியேட்டர் பின்புறம் அமைந்துள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் தினசரி காலை 10:00 மணி முதல், இரவு 7:00 மணிவரை இந்நிகழ்ச்சி நடக்கிறது.

கல்வி நிறுவனங்களின் ஸ்டால்


நிகழ்ச்சியில், பொறியியல், கட்டடக் கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம், அனிமேஷன், கலை - அறிவியல், உட்பட அனைத்து துறை சார்ந்த 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெற உள்ளன. இங்கு, உயர்கல்வி தொடர்பான அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரையிலான அனைத்து தகவல்களையும் பெறலாம்.நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் நிபுணர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறும் முறை, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

நுழைவுத் தேர்வின் அவசியம்
'நீட்', ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறை, 'கிளாட்', 'நாட்டா', 'கேட்' போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,- ஐ.ஐ.எஸ்.சி., -ஐ.சி.டி,, எய்ம்ஸ், ஐ.எஸ்.ஐ., -ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறை குறித்தும் நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

சந்தேகங்களுக்கு தீர்வு
மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், உதவித் தொகை பெறும் முறை உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடக்கிறது.

வல்லுநர்கள் ஆலோசனை

மருத்துவம், இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் சர்வீஸ், சட்டம், கலை-அறிவியல், சைபர் செக்யூரிட்டி, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிஷன் லேர்னிங், டீப் லேர்னிங் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

அனுமதி இலவசம்
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

பரிசு மழை
நிகழ்ச்சியில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்படும்.

இணைந்து வழங்குவோர்.
இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன், கோவை ராமகிருஷ்ணா எஜிகேஷன் இன்ஸ்டிடியூஷன், பிக் எப்.எம்.,-92ஒ.7, எஸ்.மீடியா, அக்குவா கிரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

மிஸ் பண்ணாதீங்க
உயர்கல்வி தொடர்பான அனைத்துவித சந்தேகங்களுக்கும் ஒரே இடத்தில் விளக்கம் பெற்று, தெளிவு பெற்றிட 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சிக்கு மிஸ் பண்ணாமல் அவசியம் வாருங்கள்.



உடனே பதிவு செய்யுங்கள்

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடக்கிறது. உயர்கல்வி குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு நேரில் விடை காண www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும் உடனே பதிவு செய்யுங்கள்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X