நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள்...விரைவில் தூள் தூள்! 81 பேருக்கு பறந்தது நோட்டீஸ்!
Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை இடங்களை ஆக்கிரமித்து, கடைகள் மற்றும் நிறுவனங்கள் அமைத்திருந்த 81 பேருக்கு, 15 நாட்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், படுமோசமாகவுள்ள ரோடுகளில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 16 ரோடுகளைச் சீரமைக்க, ரூ.140 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டுள்ளது.


இந்த ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின், ரோடு சீரமைப்புப் பணிகள் துவங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.சீரமைக்கப்படவுள்ள 16 ரோடுகளில், மிக மோசமாக இருக்கும் சுந்தராபுரம்-மதுக்கரை ரோடும் ஒன்றாகும். இந்த ரோட்டில், சுந்தராபுரம் சந்திப்புப் பகுதியிலிருந்து, 1.8 கி.மீ., துாரத்துக்கு ரோடு மேம்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 10.2 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கவுள்ள, இந்த மேம்பாட்டுப் பணியில், தற்போது இரு வழிப்பாதையாகவுள்ள ரோடு, நான்கு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது. இதில் 1.8 கி.மீ., துாரத்துக்கும் சென்டர் மீடியனுடன், 15.6 மீட்டர் அகலத்துக்கு ரோடு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.இதையொட்டி, சாத்தியமுள்ள பகுதிகளில் மழை நீர் வடிகாலுடன், சிறுபாலம் (கல்வெர்ட்) ஒன்றும் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே இந்த ரோடு படுமோசமாக இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மிகவும் மோசமாகி ஆபத்தான ரோடாக மாறியுள்ளது. இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக, ரோடு விரிவாக்கப்பணியை முடிக்க வேண்டுமென்று, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் ரோடு சீரமைப்புப் பணிகளைத் துவங்குவதற்கு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்கு நெடுஞ்சாலைத்துறையின் இடம், பெரியளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில், ரோடு விரிவாக்கத்துக்காக நிலத்தை அளந்து, குறியீடுகள் வரையப்பட்டபோதுதான் இது தெரியவந்தது.சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை செல்லும் ரோட்டின் இடது புறத்தில், 400 மீட்டர் துாரத்துக்கு 32 ஆக்கிரமிப்புகளும், வலது புறத்தில் 1200 மீட்டர் துாரத்தில் 49 ஆக்கிரமிப்புகளுமாக மொத்தம் 81 ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை அகற்றுவது தொடர்பாக, கடந்த 11ம் தேதியன்று, டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ் தலைமையில், வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர். கடந்த 13ம் தேதியன்று, இவர்கள் அனைவருக்கும் 15 நாட்கள் அவகாசம் வழங்கி, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கெடு, வரும் 28ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசம் தரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அவரவர்களே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லாதபட்சத்தில், மே 30லிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இந்தப் பணிகள் முடிந்தபின், ரோடு சீரமைப்புப் பணி, ஜூன் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.-நமது நிருபர்-

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X