கால் நூற்றாண்டைக் கடந்து சிறப்பானகல்விச் சேவையில் ஆர்.கே.எஸ்., கல்லூரி:சேர்மன் மகுடமுடி பெருமிதம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'நாக்' தரச்சான்று பெற்ற இரு பாலர் டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரி, எளியோரையும் வலிமையாக்கும் என சேர்மன் கூறினார்.

கல்விச் சேவையில் தனியாத ஆர்வம் கொண்ட டாக்டர்கள் மகுடமுடி, குமார், மணிவண்ணன், திருஞானசம்மந்தம், உமாராணி ரவி உள்ளிட்ட மருத்துவர்களாலும், பொறியாளர் கோவிந்தராஜூ மற்றும் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கல்வியாளர்களால், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி கல்லுாரி துவங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்திலேயே முதன் முதலாக 25 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கால் நுாற்றாண்டைக் கடந்து சிறப்பான கல்விச் சேவையை செய்து வருகிறது
இதுகுறித்து, டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்விக்குழுமத்தின் சேர்மன் டாக்டர் மகுடமுடி கூறியதாவது:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'நாக்' தரச்சான்று பெற்ற ஒரே இரு பாலர் கல்லுாரி ஆகும். 9 இளங்கலை, 8 முதுகலை, 2 இளமுனைவர், 1 முனைவர் பாடப்பிரிவுகள் உள்ள கல்லுாரியில், இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.இங்கு பயிலும் மாணவர்கள் பல்கலைகழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வாரம் தோறும் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சாதனை படைத்து மாநில, தேசிய அளவில் இடம் பிடித்துள்ளனர். அரசு கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு பெற்று தரப்படுகிறது.ஏழை, எளிய மாணவர்கள், மதிப்பெண், விளையாட்டு உள்ளிட்ட காரணங்களால், நிர்வாக குழு கல்வி உதவி தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.
கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் உலகின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வருகின்றனர். சிலர், தனி நிறுவனம் அமைத்து பணியளித்தும் வருகின்றனர்.மாணவ, மாணவிகளுக்கு வேம்பு மற்றும் நிலா இல்லம் என தனி, தனி விடுதிகள் குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான முறையில் சிறந்த கட்டமைப்போடு பராமரிக்கப்படுகிறது.சத்துள்ள உணவு, மாலை நேர சிற்றுண்டி, சுண்டல், பால் போன்ற உடலுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு வழங்கப்படுகிறது.இவ்வாறு சேர்மன் மகுடமுடி கூறினார்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X