டூ வீலர் பார்க்கிங்காக மாறிய வளவனூர் பயணிகள் நிழற்குடை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
டூ வீலர் பார்க்கிங்காக மாறிய வளவனூர் பயணிகள் நிழற்குடை
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

விழுப்புரம்:வளவனுார் பயணிகள் நிழற்குடை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி விட்டது.


விழுப்புரம் அடுத்த வளவனுார் கடை வீதியில் மாஜி அமைச்சர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது இந்த பயணிகள் நிழற்குடை இருசக்கர வாகன நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. இதனால், பயணிகள் நிழற்குடையில் பொதுமக்கள் மற்றும் பஸ்கள் நிற்க்காமல், சாலையில் நிற்கும் அவலம் நீடித்து வருகிறது.எனவே, பயணிகள் நிழற்குடையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வளவனுார் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X