'கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி, உலக தரத்திற்கு ஈடான கல்வி நிறுவனம்' என பள்ளி நிறுவனர்செந்தில்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்களம் புறவழிச்சாலையில், காற்றோட்டமான வசதியுடன், இயற்கை எழில் கொஞ்சும் வகையில் ஜே.எஸ்., பள்ளி வளாகம் அமைந்துள்ளது. கே.ஜி.,முதல் 10ம் வகுப்பு வரை குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளது.
10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதப்படிஅனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு, நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 'ஸ்மார்ட் போர்டு' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.பள்ளியில் மொழி ஆய்வகங்கள், கணிதம், கணினி மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆய்வுக் கூடங்கள், நவீன மயமாக்கப்பட்ட நுாலகம்உள்ளது. நீட், ஜே.இ.இ., - ஐ.ஐ.டி., உள்ளிட்ட அரசு நுழைவு போட்டி தேர்வுகளை, சுலபமாக எதிர்கொள்ளும் மாணவர்களைஉருவாக்குகிறோம். இதற்காக சிறப்பு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பாடங்களைகற்பிக்கிறோம்.
மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், யோகா, கராத்தே, ஸ்கேட்டிங், நீச்சல், நடனம், இசை, ஓவியம், ரோபோடிக்,வானியல் ஆராய்ச்சிக்கான கல்வி, கேலியோ கிராப்பி கையெழுத்து ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.விளையாட்டுப் போட்டிக்கென உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. மாணவ, மாணவிகளுக்கென தனி, தனியாக குளிர்சாதன வசதியுடன் கொண்டவிடுதிகள், பேருந்துகள் உள்ளன. கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தில் ஜே.எஸ்., குளோபல் பள்ளி செயல்பட்டு வருகிறது.